திருக்குறளை இயற்றியவர் திருவள்ளுவர்.
இவரது காலம் கி.மு 31.
திருவள்ளுவர் ஆண்டு கணக்கிடும் முறை கிறிஸ்து ஆண்டு கி.பி + 31 திருவள்ளுவர் ஆண்டு.
திருவள்ளுவரின் வேறு பெயர்கள்:
- நாயனார்
- முதற்பாவலர்
- நான்முகனார்
- செந்நா போதார்
- தேவர்
- தெய்வப்புலவர்
- மாதானுபங்கி
- பெருநாவலர்
- பொய்யில் புலவர்
திருக்குறளின் வேறு பெயர்கள்:
- முப்பால்
- தெய்வநூல்
- உத்திர வேதம்
- பொய்யாமொழி
- தமிழ்மறை
- திருவள்ளுவம்
- வாயுறை வாழ்த்து
- பொதுமறை
திருக்குறள் உலகம் ஏற்கும் கருத்துக்களை கொண்டுள்ளதால் உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது. இந்த நூல் 107 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளுக்கு அந்நாளிலேயே பதின்மர் உரை எழுதியுள்ளனர். அவ்வுறையில் பரிமேலழகர் உரையே சிறந்தது.
திருக்குறளுக்கு உரை எழுதிய பதின்மர்:
- தருமர்
- தாமத்தர்
- பரிதி
- திருமலையர்
- பரிப்பெருமாள்
- மணக்குடவர்
- நச்சர்
- பரிமேலழகர்
- மல்லர்
- காளிங்கர்
விக்டோரியா மகாராணி கண்விழித்தும் முதலில் படிக்கும் நூல் திருக்குறள்
திருக்குறள் ஏழு சீர்களைக் கொண்ட வெண்பாக்களால் ஆனது.
அதிகாரங்கள் 133 குறள் பாடல்கள் 1330
திருக்குறள் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் என மூன்று பிரிவுகளைக் கொண்டது.
- அறத்துப்பால் 38 அதிகாரம்
- பொருட் பால் 70 அதிகாரம்
- காமத்துப்பால் 25 அதிகாரம்
என மூன்று பிரிவுகளை கொண்டுள்ளது.
திருக்குறளை ஜி.யு போப் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றும் பொதுநெறி காட்டியவர் திருவள்ளுவர்.
தமிழ்ச் சான்றோர் பலரால் இயற்றப்பட்ட திருவள்ளுவமாலை திருக்குறளின் பெருமையை போற்றி புகழ்கிறது.
வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே என்றும் இணையில்லா முப்பாலுக்கு இந்நிலத்தை என்றும் பாவேந்தர் பாரதிதாசன் திருக்குறளை போற்றி புகழ்ந்துள்ளார்.
மலையத்துவன் மகன் ஞானப்பிரகாசம் 1812 ல் திருக்குறளை முதன் முதலில் பதிப்பித்து தஞ்சையில் வெளியிட்டார்.
வீரமாமுனிவர் திருக்குறளை லத்தீனில் மொழிபெயர்த்துள்ளார்.
உருசிய நாட்டில் அணு துளைக்காத கிரெம்லின் மாளிகையில் உள்ள சுரங்க பாதுகாப்பு பெட்டகத்தில் திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.
இங்கிலாந்து நாட்டு காட்சி சாலையில் திருக்குறள் விவிலியத்துடன் வைக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு தைத்திங்கள் இரண்டாம் நாள் திருவள்ளுவர் நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது.
Comments
Post a Comment